Tuesday 23rd of June 2026

English Tamil
Advertiesment


எரிபொருள் நெருக்கடியை தீர்க்க வீசா வழங்கும் பிரிட்டன்


2021-09-25 15858

 

பிரித்தானியாவில் உருவெடுத்துள்ள எரிபொருள் விநியோக நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், வெளிநாடுகளில் இருந்து பாரஊர்தி சாரதிகளை தொழிலுக்கு அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் இன்னும் சில தினங்களில் பெற்றோல், டீசலுக்கான விநியோக நெருக்கடி முடிவுக்கு கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நெருக்கடிக்குத் தீர்வாக தற்காலிக தொழில் வீசாக்களை வழங்கி வெளிநாடுகளிலிருந்து சாரதிகளை தொழிலுக்கு அமர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மிகவேக வீசா விநியோக்தின் அடிப்படையில் இந்த செயற்பாட்டை மேற்கொண்டு இன்னும் ஓரிரண்டு தினங்களில் நெருக்கடியை தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரித்தானிய அரசாங்கம் தெரிவிக்கின்றது.

இந்த நிலையில், இதுவரை 5000 தற்காலிக தொழில் வீசா அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஒருஇலட்சம் பாரஊர்தி சாரதிகளுக்கான வெற்றிடம் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

Advertiesment